இணையவழி கற்பித்தல் செயல்பாட்டினை புறக்கணித்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கமைய குறித்த போராட்டம் வலயக்கல்வி பணிமனைகளுக்கு முன்னால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கொழும்பில் லிப்டன் சுற்றுவட்ட பகுதியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



