கந்தசஷ்டி விரதத்தின் போது அனுஷ்டிக்கப்பட வேண்டிய மந்திரம்…!!

0

கார்த்திகை மாதம் வளர்ப்பிறையில் வரக்கூடிய சஷ்டி மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. அந்த நாளை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விரதம் இருப்பதும் சூரசம்ஹாரப் பெருவிழாவுடன் இந்த விரதம் நிறைவடையும். சஷ்டி விரதத்தின் போது உச்சரிக்க வேண்டிய முருகன் மந்திரங்கள் இங்கு பார்போம்.

கந்த சஷ்டிக்கு விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
கந்த சஷ்டி விரதத்தின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

மூல மந்திரம் :
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது. ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும்

Leave a Reply