யாழில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தில் தங்கத்தட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய சுமார் 38 பவுன் நிறையுடைய தங்க தட்டே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டு கதிர்காமம் அனுப்பப்பட்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
மேலும் குறித்த தங்க தட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சுமார் முப்பத்தி எட்டு பவுன் நிறையுடைய குறித்த தங்க தட்டு இரு வாரங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



