ராகம மற்றும் பேரலந்த தொடருந்து நிலையத்துக்கு இடையில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ராகம தொடருந்து நிலைய பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளத்தில் இருந்து பாணாந்துறை நோக்கி பயணம் செய்த தொடர்ந்தை அதன் பின்னால் வந்த மற்றுமொரு தொடர்ந்து எஞ்சின் மோதியதில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



