தமிழகத்தில் தீபாவளி வரை ஐந்து நாட்களுக்கு பலத்த மழை.

0

தமிழகத்தில் தீபாவளி வரை ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை கடலோர பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகின்றது.

அத்துடன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் தீபாவளி வரை ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.

மேலும் குறைந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply