தெல்தெனிய – அம்பகோட்டே பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டிலிருந்து துப்பாக்கி, அதற்காக பயன்படுத்தும் 100 தோட்டாக்கள், ஆயுதங்கள் மற்றும் உந்துருளி களுக்கான உதிரி பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் அமெரிக்கப் பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



