இலங்கையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் களனி – முதுங்கொட பராமரிப்பு பணிகள் காரணமாகவே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு சியம்பலாபேவத்தை, பியகம, தெல்கொட, உடுபில, அக்குருமுல்ல, கந்துபொட, தெமலகம, பெலஹெல, தெகட்டன, இந்தோலமுல்ல, தொம்பே, நாரன்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



