பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு உபவேந்தர்களுக்கு அனுமதி.

0

பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் பாடசாலைகள் அனைத்தும் கட்டங் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்ற நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

இதற்கமைய விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய பல்கலைக் கழகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply