கவர்னர் ஆர். என். ரவியை இன்று சந்திக்கவுள்ள முதலமைச்சர்.

0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர். என். ரவியை இன்றுன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு தேசிய அளவில் நடப்பதால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி விடுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக நீட் தேர்வுக்கு
தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

இதன் பிரகாரம் 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதுவரையில் தற்கொலை செய்துள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழர்களுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி சட்டசபையில் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த சட்டம் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் ஆர். என். ரவியை சந்திக்கவுள்ளார்.

Leave a Reply