சென்னையில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என சென்னை கலெக்டர் விஜயராணி அறிவித்துள்ளார்.
இதற்கமைய ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காந்தி ஜெயந்தியையொட்டியும், 19-ந் தேதி மிலாதுநபி தினத்தன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நாட்களில் மதுபான விற்பனை செய்யக்கூடாது.
மேலும் அவ்வாறு மீறி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



