பற்றைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சளுடன் மூவர் கைது!

0

217 கிலோ கிராம் மஞ்சள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் குறித்த மஞ்சள் தொகை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள், தீருவிலிலிருந்து இருந்து வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 26,28 மற்றும் 46 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply