தம்பலகாம பிரதேசத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வு!

0

சர்வதேச சிறுவர்கள்,முதியோர்கள் தினமான இன்று தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தம்பலகாமம் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது கல்மெட்டியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள வளாகத்தில் இடம் பெற்றது. “அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகளே” எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி கலந்து கொண்டு மரக்கன்றுகளை சிறுவர்கள் சகிதம் நட்டு வைத்தார்.

இதனை தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான பலா மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,முதியோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply