இவை ஒரு ஸ்பூன் போதும்… உங்கள் பற்களின் மஞ்சள் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..!

0


எவ்வளவு தான் தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்கினாலும் பற்களின் இடுக்குகளிலும் உட்பகுதியிலும் மஞ்சள் கறைகள் உண்டாவதைத் தடுக்க முடிவதில்லை. அப்போ எப்படி தான் சரிசெய்வது?


பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, நாளடையவில் ஈறுகளையும் பாதிக்க ஆரம்பித்துவிடும்.


மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க முடியும்.


தேங்காய் எண்ணெயைக் கொண்டே மஞ்சள் கறையைப் போக்க முடியும்.


தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். 10 நிமிடம் வரை வைத்திருந்து கொப்பளிக்க வேண்டும். பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு பற்களைத் தேய்க்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் ஒரு வாரத்திலேயே நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம்.


எள்ளும் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும். ஒரு கைப்பிடியளவு எள்ளை வாயில் போட்டு, நன்கு மென்று துப்ப வேண்டும். பின்னர் வெறும் பிரஷ் கொண்டு, பல்லை நன்கு தேய்க்க வேண்டும்.


தக்காளியில் அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. தக்காளிப் பழத்தை வெட்டி, அதன் தசைப்பகுதியில் பற்களில் நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துப் பின் பல் துலக்க வேண்டும்.


ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், அரை கப் வினிகர், 10 துளிகள் எலுமிச்சை ஜூஸ் மற்றும் கால் கப் கிளிசரின், அரை கப் பேக்கிங் சோடா கலவை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் கொப்பளிக்க வேண்டும்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply