மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரகக் கோளாறுகளுக்கு கொய்யா!

0


கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்

100 கிராம் கொய்யாவில் புரதம் 1 கிராம், கொழுப்புச்சத்து 0.30 கிராம், நார்ச்சத்து 5.40 கிராம், மாவுச்சத்து 11.6 கிராம், கால்சியம் 10 மிகி, பாஸ்பரஸ் 28 மிகி, விட்டமின் C 232 மிகி இதை தவிர விட்டமின் A, B மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளது.


கொய்யா பழத்தை எப்படி சாப்பிடலாம்?

நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு ஆகியவை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.


கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தை சேர்த்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறுவதுடன், ரத்தம் சுத்தமாகும்.

மதிய உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல், வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரகக் கோளாறு ஆகியவை குணமாகும்.


கொய்யா பழத்தில் நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரையும் உள்ளது. எனவே தினம் ஒரு கொய்யாவை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும்.


கொய்யாவின் இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து அதை குடித்து வந்தால், வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply