இரு கொவிட் 19 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்.

0

இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு திரும்பவும் குறித்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமுதாய மருத்துவ விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம் பொடி தனது டுவிட்டர் பதிவில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமல் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக் கொண்டோரில் 65 முதல் 70 சதவீதமானோருக்கு கொவிட் தொற்று உறுதியானதாக புதிய ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தடுப்பூசிகளினை செலுத்திக் கொள்வதால் மரணம் ஏற்படுவதை தவிர்க்க முடியுமே தவிர தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

எனவே அனைவரும் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டாலும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply