அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை!

0

அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பொருட்களுக்குரிய நிர்ணய விலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிட்டதன் பின்னர் அதனை மீறுபவர்களுக்கு எதிராகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிநபர் வியாபாரங்களுக்காக விதிக்கப்பட்ட 1,000 ரூபாய் அபராதம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் 5 லட்சம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இரண்டாவது தடவையாகவும் அதி கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் 2, 000 ரூபா தாண்ட பணத்திற்காக 20,000 ரூபாவாகவும் , 2 லட்சம் ரூபாவிற்கு பத்து லட்சம் ரூபா அபராதமும் என விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிறுவனமொன்றில் குறித்த தவறு குறைக்கப்படும் பட்சத்தில் 10,000 ரூபாய் என்ற தண்டப்பணமும் ஒரு இலட்சம் ரூபாவாகவும், 5 லட்சமாக நிலவிய அபராதம் 50 லட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்ட மூலம் திருத்தம் நேன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply