பால் மாவின் விலை நிர்ணயம் தொடர்பில் முடிவு எடுப்பதற்கு நாளைய தினம் கூடும் குழு.

0

அலரி மாளிகையில் நாளைய தினம் முற்பகல் 10 மணியளவில் வாழ்க்கைச் செலவு குழு கூடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அதுடன் குறித்த கலந்துரையாடலின் போது பால் மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

இருப்பினும் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

தங்களுக்கு ஏற்படும் நடத்தை கருத்திற் கொண்டு இறக்குமதியாளர்கள் பால் இறக்குமதியை இடை நிறுத்தியுள்ளனர்.

இதன்காரணத்தால் சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுள்ளமை சுட்டிக்கடத்தக்கது.

Leave a Reply