பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

0

இலங்கையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய நாளை மறுதினம் இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு கூட்டத்தில் பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பவற்றை கருத்திற் கொண்டு பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அதன் இறகுமதியாளர்கள் அரசாங்கத்தை கோரியிருந்தனர்….

இருப்பினும் அரசாங்கம் அதற்கு இதுவரை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.

மேலும் தங்களுக்கு ஏற்படும் நட்டத்தினை கருத்தில் கொண்டு பால்மா இறக்குமதியினை அதன் இறக்குமதியாளர்கள் இடை நிறுத்தியிருந்தனர்.

இதன் பிரகாரம் சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பால்மா இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது ஒரு கிலோ பால் மாவின் விலை நிலை 350 ரூபாவால் அதிகரிக்கப்படும் என இறக்குமதியாளர்களின் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply