குஜராத் மாநிலம் அகமதாபாத்-தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அனுமதி இல்லை!

0

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுள்ளது.

இந்த மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொது போக்குவரத்துகள், பொது கட்டிடங்கள், அரசு சார்ந்த பொதுவிடங்களில் குறித்த சான்றிதழ் சரிபார்க்கப்படும்.

மேலும், இந்த தடுப்பூசியின் செலுத்தி கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply