இன்று முதல் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடர்!

0

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இதற்கமைய நியூயோர்க்கில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் தற்போது பரவி வரும் கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல் , மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற பல வடிவங்களில் மையமாகக் கொண்டே குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கடந்த வாரம் நியூயோர்க் சென்றடைந்தார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply