இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயண தடையானது எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் திறக்கப்படுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
இதற்கமைய குறித்த முடிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள கொவிட் 19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலனி கூட்டத்தின் போதே மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் தற்போது அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ச்சியாக நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இலங்கை தொடர்ந்தும் சிவப்பு வளையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் அதனை பச்சை வளையமாக மாறுவது தமது இலக்காக வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதில்லை குறித்தும் இதன்போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



