கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டதினை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளமையால் குறித்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
மேலும் குறித்த பயணக் கட்டுப்பாடுகளை மிக கடுமையான முறையில் ஏற்படுத்தாவிட்டாலும் தற்போதைய நடைமுறையிலே எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிப்பது சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



