நாடு மீண்டும் திறக்கப்படுமையின் அதற்கு முன்பு பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் உரிய தீர்மானம் மிக்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வைத்தியர் பத்மா குணரட்ன நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உரிய தீர்வு எடுக்காவிடில் நாடும் மீள பிரச்சனைகளுக்குள் செல்ல நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் தொற்று பரவல் அதிகரிப்பதற்கு பொது போக்குவரத்து சேவையும் காரணமாகவுள்ளது.
எனவே நாட்டை மீளத் திறப்பதற்கு முன்னர் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.



