அவசர கால ஒழுங்கு விதிகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவுள்ள தேசிய மக்கள் சக்தி!

0

நாடாளுமன்றத்தில் இன்று அவசர கால ஒழுங்கு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பிரேரணை

ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக வெளியிடப்பட்ட அவசர கால ஒழுங்கு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 10.30 முதல் குறித்த விடயம் தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனம் படுத்தப்பட்ட அவசர கால ஒழுங்கு விதிகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply