இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

0

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 44,658 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரத்து 861ஆக உயர்வடைந்துள்ளது.

நாடு முழுவதும் 3 லட்சத்து 44 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply