தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு!

0

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலை காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளது இதனை கருத்திற் கொண்டு அரசினால் மக்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இடம் பெற்று வருகிறது.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் இதற்கான அங்குராரப்பண வைபவம் இன்று பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.

அரசாங்கத்தின் சுற்று நிரூபத்துக்கு அமைய இக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இடம் பெறுகிறது. தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக 3349 பயனாளிகள் பெறுவதற்கான தகுதி பெற்றுள்ள நிலையில் முதற்கட்டமாக 1100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,கணக்காளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் டொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply