திருகோணமலை-கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை இடைத் தங்கல் முகாமிற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஒட்சிசன் செறிதாக்கி
வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் வீ.தர்மபவனினால் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் சோபாவிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலை,நிலாவெளி சமுர்த்தி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் இடைத் தங்கல் முகாமிற்கும் ஒட்சிசன் செறிவாக்கி வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையின் நிறைவேற்று குழு உறுப்பினர் அப்துல்சலாம் யாசீம், முதலுதவி இணைப்பாளர் பீ. ரஜினிகாந்த் மற்றும் தொண்டர் இணைப்பாளர் கோ. அன்பழகன் ஆகியோர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.



