கிராம்பபுர மூன்று பாடசாலைகளுக்கு கணனித் தொகுதிகள் வழங்கி வைப்பு.

0

டிஜிட்டல் கல்வி முறைமையை மேம்படுத்தும் நோக்குடன் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் பதினைந்து கணனித் தொகுதிகள் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று கிராமம்புர பாடசாலைகளுக்கு நேற்று முன்தினம் மக்கள் சேவை மன்றத்தின் தலைர் எம். ரீ. எம். பாரிசினால் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் டிஜிட்டல் கல்வி முறைக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டுவரும் நிலையில் கணனி வசதிகள் இல்லாத வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பாடசாலை மாணவர்களுக்கு வன்னி ஹோப் நிறுவனம் கணனி வசதிகளை வழங்கி வருகின்றது.

இந்த விசேட வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி சித்திவிநாயகர் மகா வத்தியாவயத்திற்கும், திருகோணமலை கல்வி வலையத்திற்குட்பட்ட குளக்கேட்டன் தமிழ் வித்தியாலயம் மற்றும் மட்கோ அல்-மின்ஹாஜ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா ஐந்து கணனித் தொகுதிகள் வீதம் உதவிகள் வழங்கப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவர்கள் மிக நீண்டகாலமாக கணணி வசதிகள் இல்லாத நிலையில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்களின் சௌகரியங்களையும் தற்போதைய சூழலில் கணனி மூலமான கற்கையின் அவசியத்தினையும் கருத்திற் கொண்டு வன்னி ஹோப் நிறுவனம் ஊடாக மக்கள் சேவை மன்றம் இந்த தேவையை நிறைவேற்றியுள்ளது.

சுகாதார வழிமுறைக்கு அமைய நடைபெற்ற கணனிகள் கையளிக்கும் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பபர் ஏ.சீ. முஸ்இல், கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் தகவல் தொடர்பாடலுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.முசௌபர், கிண்ணியா மற்றும் தம்பலகமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஏ. சி. எம்.நஸார் மற்றும் என். சுரோஸ், மக்கள் சேவை மன்றத்தின் திட்ட முகாமையாளர் கே. தவசீலன், திட்ட உத்தியோகத்தர் ஆர். கணேஷமூர்த்தி, பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply