சாப்பிடும்போது காலை கீழ தொங்கப்போடுவீங்களா?… இந்த உண்மை தெரிஞ்சா அப்படி செய்யமாட்டீங்க…

0


நம்முடைய முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்வதில்லை. விட்டம், கதவு என அத்தனையையும் தேக்கால் இழைத்தவர்களுக்கு டைனிங் டேபிள் வொங்க முடியாமல் இல்லை. ஆனால் சாப்பிடும்போது கீழே அமர்ந்து சம்மணங்கால் போட்டுதான் சாப்பிட்டார்கள்.

இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இன்றோ நாம்,


கீழ சம்மணங்கால் போட்டு சாப்பிடற பழக்கமே இல்லைங்க… , கீழ உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு நான் கேவலமா போயிட்டேனா..? என தன்மானம், கௌரவம் சார்ந்த காரணங்கள் மறுபுறம்…. நாம் சம்மணங்கால் இட்டு சாப்பிடும் பழக்கத்தை விட்டு வெகுதூரம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், அறிவியலோ… சம்மணங்கால் இட்டு சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்கிறது.


நமது உடலை இடுப்பை மையமாக வைத்து, கீழ் உடல், மேல் உடல் என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் முக்கியமான உடல் உறுப்புகள் பல மேல் உடலில் தான் இருக்கிறது. கீழ் உடலில் கால்கள் மட்டுமே இருக்கின்றன.

நடக்கும் போது மட்டும் தான் இரத்த ஓட்டம் கால்களுக்கு தேவைப்படுகிறது. மற்ற வேளைகளில் மேல் உடலில் இருக்கும் கண், காது, மூளை, கணையம், நுரையீரல், சிறுநீரகம், போன்றவைக்கு தான் இரத்த ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது.


சாப்பிடும் போது கீழே தரையில் சம்மணங்கால் இட்டு அமர்ந்து உணவு உட்கொள்வதால் உடலுக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகம் கிடைக்கிறது.

காலை மடக்கி அமரும் இந்த நிலையில், உணவு உட்கொள்வதால், சாப்பிடும் போது மேல் உடலுக்குத் தேவையான அளவு இரத்த ஓட்டம் செல்லும். இது மேல்உடல் பாகங்களின் செயல்திறனை ஊக்குவிக்கும்.


முக்கியமாக, சம்மணங்கால் இட்டு உணவு உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுப்பெற்று, செரிமானம் சீராகவும், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்சனைகள் உண்டாகாமல் இருக்கவும் உதவும்.

கீழே கால்களைத் தொங்கவிடுதல்… மாறாக, நீங்கள் கால்களை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் போது, போதுமான இரத்த ஓட்டம் மேல் உடலுக்கு செல்லாமல். தேவையின்றி கீழ் உடலுக்கு கால்களுக்கு செல்லும். இதனால் மேல் உடலின் செயல்திறன் பாதிக்கப்படும்.


இனிமேலாவது டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பியுங்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply