நுகர்வோர் அதிகார சபை சீனிக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்த்தன விடம் அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவது குறித்து வினவப்பட்டது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர் நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
180 நாட்களில் செலுத்தும் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த கடன் வழங்கப்பட்டது.
அத்துடன் இதற்கான தொகை தொடர் பேரும் அதிகமாக செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதோடு சீனியின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.



