நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகளவில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் முகக் கவசங்கள் இன்றி வெளியில் நடமாடுபவர்களை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய இந்த வார இறுதியில் குறித்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



