ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவத்தில் கொச்சிக்கடை தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலவுதீன் மொஹமட் முவாத் என்பவரின் தந்தை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இது குறித்த உத்தரவு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நபர் ஒன்றரை வருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



