தொடர்ந்தும் இணையவழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணிக்கும் அதிபர் ஆசிரியர்கள்!

0

கடந்த 4ஆம் திகதி அதிபர் ஆசிரியர் தொழிற் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றைய தினம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.

இதற்கமைய தமது வேதனை பிரச்சனைகள் தொடர்பான முரண்பாட்டுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரியே குறித்த சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் இன்று முற்பகல் 10 மணிக்கு பஸ்யால நகரில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பேரணி யக்கல நகர் வரை சென்றடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர் அதிபர் சங்கத்தினரால் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் இன்று 27 ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply