நாட்டில் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதினால் வைத்தியசாலைகளில் பிரேத அறைகளில் மிக மோசமான அளவுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகன சாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதனால் குறித்த சரீரங்கள் அதிக அளவில் வைத்தியசாலையில் தேங்கிக் கிடக்கின்றன,
அத்துடன் கொவிட் மரணங்கள் அல்லாதபிற காரணிகளினால் உயிரிழப்பவர்களின் உடல்களும் அங்கு தகனம் செய்யப்படுவதால் இவ்வாறான ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு வைத்தியசாலையில் 600 கொவிட் நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 12 முதல் 15 மரணங்கள் வரை பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.



