அதிபர்கள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்களின் வேதனை பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதனால் இணையவழி கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் ,அதிபர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டம் இவ்வாறு தொடர்ந்து செல்லும் என
குறித்த தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதற்கமைய கல்வி அமைச்சரினால்அண்மையில் ஆசிரியர்களின் வேதனை முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயத்திற்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக கூறி அமைச்சரின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாமல் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.



