சுவர்ண மஹால் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக்க எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராகவே குறித்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன்இவ்வாறு கைது செய்யப்பட நால்வரும் கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றப் பத்திரம் வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேழும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட நால்வரும் பணச் செலவை குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



