நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

0

தற்போது நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய வருடந்தோறும் 800 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதர அமைச்சின் தேசிய தொற்றா நோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் திடீர் அனர்த்தங்களால் மரணிக்கின்ற காரணிகளில் நீரில் மூழ்கி பலியாகின்றமை 2வது இடத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறு பலியாகின்றவர்களில் அதிகமானோர் 21-60 வயத்திற்குற்பட்டவர்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பயண தடை விதித்த காரணத்தால் இவ்வாறு நீரில் மூழ்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply