நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
இதற்கமைய குறித்த வீதி விபத்து காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 8 பேர் பலியாகி உள்ளனர்.
அத்துடன் குறித்த விபத்துகளில் மூன்று பாதசாரிகள் ,முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர்,உந்துருளியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்வபங்களுக்கு கவன குறைவான வாகன செலுத்துகையே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



