தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நூலகங்களையும் திறப்பதற்கு அனுமதி!

0

கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணத்தினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமுல்ப் படுத்தப்பட்டது.

இதனால் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டும் கூட நூலகங்கள் திறக்கப்படாத வண்ணம் காணப்பட்டண.

குறித்த நூலகங்களை திறக்க பலரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் இந்த நூலகங்களை இன்று முதல் திறப்பதற்கு பொது நூலக இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து பொது நூலகங்களும் இன்று முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அத்துடன் கொவிட் அச்சுறுத்தல் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்கள் தவிர்ந்த பிற நூலகங்கள் திறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், 65 வயதான வர்கள் ஆகியோர் இந்த நூலகத்திற்கு வருவதற்கு அனுமதி இல்லை என பொது நூலகத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply