கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று முன்தினம் 317 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையில் ஐவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதேவேளை நேற்றையதினம் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டு பேருக்கு குறித்த தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த சேவை சந்தையையும் திறந்துவிடுவது தொடர்பில் கச்சேரி பிரதேச சபையினர் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த சந்தையில் சேவை பெறுவோர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் சேவை சந்தையில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



