கேரளா மாநிலத்தில் கொவிட் 19 பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை.
இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 17 பேருக்கு ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் நேற்றைய தினம் மாத்திரம் குறித்த தொற்றால் 105 பேர் உயிரிழந்ந்துள்ளனர்.
இந்நிலையில் கோரத்தாண்டவம் ஆடும் கொவிட் தொற்று காரணத்தினால்அவற்றை கட்டுபப்டுத்துவதற்கு கேரள அரசு பேரிடர் மேலாண்மை சட்டப்படி, கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
மேலும் எதிர்வரும் 23 ஆம் திகதி மாநிலம் முழுவதும் மிக பிரம்மாண்டமான கொவிட் பரிசோதனைகள் முகாம்களை நடத்தி ஒரு நாளில் மாத்திரம் 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.



