130 அடியை எட்டிய பெரியாறு அணையின் நீர்மட்டம்.

0

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவாத்தினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகின்றது.

இதற்கமைய கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயர்ந்துள்ளது.

அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சரியத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்கள் பெய்த மழை காரணத்தினால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின் படி அணையின் நீர்மட்டம் 130. 05 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1,717 கன அடி தண்ணீர் வருகின்றது.
அத்துடன் அணையில் இருந்து 1200கன அடி தண்ணீர் நிரப்பப்படுகிறது.

நீர் இருப்பு 4709 மில்லியன் கன அடியாக காணப்படுகின்றது.

மேலும் வைகை அணையின் நீர்மட்டம் 68.29 அடியாக உள்ளது.

நீர் வரத்து 1335 கன அடி, திறப்பு 796 கன அடி, நீர் இருப்பு 5392 மில்லியன் கன அடி, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி, வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி ஆகும்.

அத்துடன் நேற்றைய தினம் மழை சற்று குறைந்தன் காரணத்தால் வைகை அணை நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாகியுள்ளது.

மழை மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் முழு கொள்ளளவான 71 அடியை வைகை அணை நீர்மட்டம் நெருங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply