பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய கன மழை!

0

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

அத்துடன் நாடு பூராகவும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

மேலும் காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக காலி வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் ஆனது அவ்வப்போது 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்

அவ்வாறு காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக காலி வரையான கடற்கரைகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

மேலும் கடலில் பயணம் மேற்கொள்பவர்கள் ,மீனவ சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply