திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் நடை – மகிழ்ச்சியில் பக்தகோடிகள்.

0

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சனிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை, 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், உஷ பூஜை, நிர்மால்ய தரிசனம், உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை மீண்டும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு, 6 மணிக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் செய்து, இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மேலும் கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக, இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள், இணையத்தின் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply