ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளைய தினம் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த கலந்துரையாடலானது நாளைய தினம் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



