மெட்ரோல் ரயில் நிர்வாகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளைய தினம் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை சேவையில் ஈடுபடும்.
அத்துடன் அரசு பொது விடுமுறை நாட்களிலும் 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கெனவே இரவு 9 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



