மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு!

0

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை 9.00 மானியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அத்துடன் இவ்வாறு கொண்டுவரப்பட தடுப்புபூசிகள் அனைத்தும் சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளால் பொறுப்பேற்கபட்டதுடன் அவை பாதுகாப்பாகன முறையில் தடுப்பூசி களஞ்சிய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply