புதிய சுகாதார வழிகாட்டியொன்று வெளியீடு!

0

தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்து நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சுகாதார வழிகாட்டி இன்றைய தினத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து.

இந்நிலையில் சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிருகக்காட்சி சாலைகளை பார்வையிடுவதற்குஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உள்ளக இசை நிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வழிபட்டு தலங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் வெவ்வேறாக வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply