கொய்யா பழத் தோலிலும் பேஸ் பேக் தயாரிக்கலாமா?

0

கொய்யா ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பழம் ஆகும்.

குறிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றல் ஜீரண சக்தி ஆகியவற்றை அளிக்க கூடிய வைட்டமின்களும் தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் அதிகளவு நிறைந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.

ஆனால் கொய்யா அழகை அதிகரிக்கவும் சருமத்தை பளபளப்பாக்கவும் மாற்றக்கூடிய திறன் கொண்டது.

அத்துடன் கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ பி மற்றும் சி நம் உடல்களில் கொல்லேயன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

இதனால் சூரியனின் கதிர்களால் ஏற்படும் சர்ம பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சரி இனி கொய்யாப்பழத் தோலை பயன்படுத்தி சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

கொய்யா பழத்தின் தோலை பயன்படுத்தி நம் வீட்டிலேயே பேஸ் பேக் தயார் செய்து சருமத்தில் பூசிக் கொள்வதினால் சருமத்திற்கு புதுப்பொலிவு கிடைக்கும்.

அந்தவகையில் கொய்யா பேஸ்பேக் எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்;

ஒளிரும் சருமம் கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன.

இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்தி மென்மையாக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படி ஃபேஸ் பேக் தயாரித்து வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

தேவையானவை:
தேன் – 1 தேக்கரண்டி
கொய்யாப்பழத்தின் தோல்

செய்முறை
முதலில் கொய்யாப் பழத்தின் தோலை சீவிக் கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பசையுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விட வேண்டும்.

20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வர இதன் பிரதி பலன்களை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply