அரச போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!

0

தமிழகத்தில் இதுவரை அரச போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளாக காணப்பட்டது.

இதற்கமைய அரச பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களில் ஆயுட்காலத்தையும் கண்டம் செய்யும் ஆண்டுகளையும் உயர்த்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பஸ்கள் ஏற்கனவே ஆறு ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் என்று இருந்ததை தற்போது இனி வரும் நாட்களில் ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் வரை அதிகரிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அரசு விரைவு பஸ்கள் மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோமீட்டர் என்று இருந்ததை இனி வரும் நாட்களில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்றும் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் தற்போது புதிய சாலைகள் அமைக்கப்பட்டு தேவையான சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன

அவ்வாறு நவீன தொழில்நுட்பம் கொண்ட பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அரசு பஸ்களின் நவீன வடிவமைப்பு காரணத்தினால் அதன் ஆயுட்காலத்தைஅதிகரித்து போக்குவரத்து துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply